spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்....எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'புஷ்பா 2' பட புதிய போஸ்டர்!

மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்….எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘புஷ்பா 2’ பட புதிய போஸ்டர்!

-

- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் புஷ்பா தி ரூல். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்....எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'புஷ்பா 2' பட புதிய போஸ்டர்!இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்....எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'புஷ்பா 2' பட புதிய போஸ்டர்!மேலும் இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 11.07 மணி அளவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் அல்லு அர்ஜுன் மாஸாக கெத்தாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ