spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு15-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுப்பு

15-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுப்பு

-

- Advertisement -

பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நாணயம் கண்டெடுப்பு. தென்பெண்ணை  ஆற்றில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்ட போது விஜயநகர கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.15-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் நேற்று கள ஆய்வின் போது ஆற்றின் கரையில்15 – ம் நூற்றாண்டை சேர்ந்த  2 செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த நாணயத்தை ஆய்வு செய்ததில் அவை விஜயநகர காலத்தில் பயன்படுத்தப்ட்ட நாணயம் என்பதும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த “லக்ண தண்ட நாயக்கர்” என்பவரின் நாணயம் என்பது தெரியவந்துள்ளது.

இரண்டாம் தேவராயரின் அனுமதி பெற்று தனது சொந்த பெயரில் இவர் நாணயங்களை அச்சிட்டுள்ளார். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோலவும், யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் “ல” என்றும் , நாணயத்தின் பின்புறம் 3 வரிகள் கன்னட எழுத்தில்” கன தனய காரு “என்று அச்சிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள நாணய ஆய்வாளர் பாலாஜி ரவிராஜன் படித்து கூறியுள்ளாா்.

தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மேற்பரப்பு களஆய்வில் தொடர்ந்து பல தொல்லியல் குறிப்புகள் “கண்டுபிடிக்கப்பட்டு”, ஆவணப்படுத்தி வருவதாக ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்துள்ளாா்.

ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்பதல் ஆணைகளை வழங்குகிறார் – முதலமைச்சர்

MUST READ