Homeசெய்திகள்தமிழ்நாடுகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஓராண்டில் 17.81 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

குமரி விவேகானந்தர் மண்டபத்தை ஓராண்டில் 17.81 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

-

உலக சுற்றுலா தலமான குமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து கடந்த ஆண்டில் 17.81 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

kanyakumari vivekananda rock

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரிமுனை திகந்து வருகிறது. இங்கு கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சென்று கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருவார்கள்.இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 வரை படகு போக்குவரத்தும் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக 2021 ம் ஆண்டு சுற்றுலா படகு சவாரி பெரும் அளவில் குறைந்து இருந்தது. இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடந்த ஆண்டு குமரி சுற்றுலா தலத்திற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரகனக்கான சுற்றுலா பயணிகள் வருகை தினந்தோறும் இருந்தது. இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சென்று 17.81 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளதாக குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ