Homeசெய்திகள்தமிழ்நாடு18 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

18 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

-

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

கொலை வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நபரை 18 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் ஆசை பங்களா… வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்…

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 2006- ஆம் ஆண்டு கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சாட்சியங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டது.

கடந்த 2008- ஆம் ஆண்டு கேரளா நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. கேரளா உயர்நீதிமன்றமும், கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதிச் செய்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்ய பயன்படுத்தியதாகக் கூறப்படும் இரும்பு கம்பி 2 ஆண்டுகள் 2 மாதங்கள் கழித்து தான் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இரும்புக்கம்பியில் ரத்தக்கறை இருந்ததாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்தது.

600 தொழிலாளிகள் உழைப்பில் காந்தாரா செட்… 40 ஆயிரம் சதுர அடியில் அரங்கம்…

திறந்தவெளியில் ஒரு கம்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரத்தக்கறையுடன் இருந்தது எப்படி? கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நபரை 4 ஆண்டுகள் கழித்து தான் சாட்சியங்கள் அடையாளம் காட்டியுள்ளன. எனவே, இந்த வழக்கில் நிறைய தவறுகள் இருப்பதை உணர்வதாகவும், தவறுதலாக சம்மந்தப்பட்ட நபர் குற்றவாளியாக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறி விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் கொலை குற்றம்சாட்டப்பட்ட நபர் 18 ஆண்டுகள் கழித்து விடுதலையாகினார்.

MUST READ