Homeசெய்திகள்சினிமா600 தொழிலாளிகள் உழைப்பில் காந்தாரா செட்... 40 ஆயிரம் சதுர அடியில் அரங்கம்...

600 தொழிலாளிகள் உழைப்பில் காந்தாரா செட்… 40 ஆயிரம் சதுர அடியில் அரங்கம்…

-

- Advertisement -
கடந்த ஆண்டு ரிஷப் செட்டி நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் இப்படம் பேசப்பட்டது. இந்தப் படத்தை கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 படங்களை தயாரித்த கோம்பாலை ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா முழுவதும் 400 கோடி வசூல் செய்தது. மண் மற்றும் மக்களின் சமய நம்பிக்கையை மையமாக வைத்த கதைக்களத்தில் இப்பாடம் உருவாகி இருந்தது.

இப்படத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டது. தற்போது காந்தாரா 2-ம் பாகம் உருவாகி வருகிறது. அண்மையில் இப்படத்தின் படப்பிப்பு பூஜையுடன் தொடங்கியது. அதோடு, படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு பகிர்ந்தது. இப்படத்தையும் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கிறார். முதல் பாகத்திற்கு முந்தையை கதையை தான் இரண்டாம் பாகமாக வெளியிடுகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்காக கர்நாடக மாநில கடற்கரை நகர் குந்தாபுராவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் உருவாகும் இந்த செட்டுக்காக ஐதராபாத், மும்பை, பெங்களூரு பகுதிகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட தச்சர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இங்கு 20 நாட்களுக்கு படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப்பட உள்ளது.

MUST READ