Homeசெய்திகள்சினிமாஸ்ரீதேவியின் ஆசை பங்களா... வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்...

ஸ்ரீதேவியின் ஆசை பங்களா… வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்…

-

- Advertisement -
சென்னையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆசையாய் வாங்கிய முதல் பங்களாவை, அவரது மகள் ஜான்வி கபூர் வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அவர் டோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தொடக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் அறிமுகமான அவர், அடுத்தடுத்து ராம்சரண் என தெலுங்கு படத்தில் கமிட்டாகி வருகிறார்.

இரண்டாவது மகள் குஷி கபூர், ஆர்ச்சிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அண்மையில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அவரும் தற்போது அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். நடிகை ஸ்ரீ தேவி உச்ச நட்சத்திரமாக இருந்தபோதே, அவருக்கு பல கோடி சொத்துகள் இருந்தன. அப்போது அவர் சென்னையில் முதல் முறையாக பண்ணை வீடு ஒன்றை வாங்கினார். இது சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. அவரது மறைவுக்கு பின்னர், பல கோடிகள் செலவு செய்து அந்த வீட்டை சென்னை அலுவலகமாக போனி கபூர் பயன்படுத்தி வந்தார்.

இந்த வீட்டில் ஸ்ரீதேவியின் பல புகைப்படங்களும், அவர் ஆசை ஆசையாய் வாங்கிய பொருட்களும் அதிகம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வீட்டை வீடியோவாக எடுத்து ஜான்வி கபூர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வீட்டை நடிகை ஜான்வி கபூர் வாடகைக்கு விட உள்ளார். இதற்காக ஏர்பின்ப் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். இதன் மூலம் இரண்டு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஸ்ரீதேவியின் பண்ணை வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். அப்படி தங்குபவர்களை நடிகை ஜான்வி கபூர் நேரில் சந்தித்து உரையாடுவாராம். வரும் மே 12-ம் தேதி முதல் இந்த பண்ணை வீட்டுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

MUST READ