Homeசெய்திகள்தமிழ்நாடு2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

-

 

2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’…. லேட்டஸ்ட் அப்டேட்!

திருக்குறள், கவிதை, ஆங்கிலம் மேற்கோள்களுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். பிரமிள் எழுதிய கவிதை, அமர்த்தியா சென் மேற்கோள் என பட்ஜெட் தாக்கலின் போது உரையாற்றினார். காலை 10.00 மணி முதல் 2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

ஊரகப் பகுதிகளில் மாற்றியமைத்த விதிகளுடன் சிற்றுந்து திட்டம் விரிவுப்படுத்தப்படும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூபாய் 3,706 கோடி ஒதுக்கீடுச் செய்யப்படும். ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். நீர்வளத்துறைக்கு ரூபாய் 6,398 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நீர்வளத் தகவல், மேலாண்மை அமைப்பை ரூபாய் 30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல பாலிவுட் பாடலாசிரியருக்கு ஞானபீட விருது அறிவிப்பு

சிறு, குறு தொழில்முனைவோருக்கு 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு 20,043 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 8,365 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மதி இறுக்கம் உடையோருக்கான உயர்திறன் மையம் ரூபாய் 25 கோடியில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ