

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்
2009- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை பின்தங்கிய குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் பல குழந்தைகளின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் இயலாத நிலை உள்ளதாகவும் கூறி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு உத்தரவை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில் விதிமீறல் இருந்தால், அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்பு
இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


