spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
File photo

இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை வரும் நவம்பர் 10- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

we-r-hiring

நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, 1 கோடி 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்ய வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

அதன்படி, மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12- ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பதுக் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் நவம்பர் 10- ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு!

காய்ச்சல் காரணமாக, கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நிலை சரியானதும் பங்கேற்கும் முதல் அரசு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ