spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று (டிச.16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.16) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சிபிசிஎல் ஆலையில் தீ விபத்து!

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.17) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (டிச.17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ