Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரியில் 30 உளவுத்துறை போலீசார் கூண்டோடு மாற்றம்

கிருஷ்ணகிரியில் 30 உளவுத்துறை போலீசார் கூண்டோடு மாற்றம்

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 உளவுத்துறை போலீசாரை முழுவதுமாக மாற்றி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

Riots at bull slaughtering ceremony near Krishnagiri: Police fire tear gas | எருது விடும் விழாவில் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

we-r-hiring

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2ம் தேதி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க தாமதம் ஆனதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியால் போலீசார், பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓசூர் கலவரம் உளவுத்துறை தோல்விக்கு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட உளவுத்துறை போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, மஹாராஜகடை, காவேரிப்பட்டினம் என அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

MUST READ