Homeசெய்திகள்தமிழ்நாடுநான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!

நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!

-

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகளில் ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான்கு புதிய மாநகராட்சிகளை உருவாக்கவும், அதன் நடைமுறைகளைத் தொடங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 28 புதிய நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன; நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தரம் உயர்வதால் மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ