அதிமுக ஆட்சியில் ரூ.53 கோடி முறைகேடு?
அதிமுக ஆட்சியின்போது ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2021 வரை, பிரதமர் வீடு கட்டும் திட்டச் செயலாக்கத்தில் ரூ.53 கோடி முறைகேடு நடந்தது சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
20216-2021 அதிமுக ஆட்சின்யின்போது வீடு கட்டும் திட்டத்தில் 5,08,641 வீடுகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில் 2,79,950 வீடுகள் மட்டுமே வழங்கபட்டுள்ளன. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளியின் குடும்ப உறுப்பினர் என்று கூறி தகுதியற்ற நபர்களுக்கு 807 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினரை மாற்றி தகுதியற்ற நபர்களுக்கு 807 வீடுகள் வழங்கியதால் அரசுக்கு ரூ.14.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின்கீழ் 1,547 வீடுகள் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.27.52 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகுதியற்ற நபர்களுக்கு வீடுகளை வழங்க அரசு ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தகுதியற்ற குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் வீடு கட்டும் திட்ட தவணைத் தொகை செலுத்தியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் தகுதியற்றா குடும்பங்களின் வங்கிக் கணக்கில் ரூ.11.34 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 3014 தகுதியற்ற குடும்பங்களுக்கு வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தை என்றும் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.