
தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ.ஆ.ப. பிறப்பித்துள்ள உத்தரவின் படி, சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண் ராஜ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!
இதுமட்டுமின்றி வேளாண்துறை இயக்குநராக முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநராக குமரவேல் பாண்டியன், அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி.பிரகாஷ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக எஸ்.நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.