spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுத.வெ.க மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விஜய் இரங்கல்

த.வெ.க மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – விஜய் இரங்கல்

-

- Advertisement -

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜயின் கட்சி மாநாட்டில் ஒலித்த கொள்கை பாடல்.... ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

we-r-hiring

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும்போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் JK.விஜய்கலை, தவெக தோழர்கள் சென்னை பாரிமுனையை சேர்ந்த வசந்தகுமார் ரியாஸ், செஞ்சியை சேர்ந்த உதயகுமார் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வில்லிவாக்கம் சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கட்சிக்காக இவர்கள் ஆற்றிய பணிகள் தவெக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கட்சி தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தவெக தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ