- Advertisement -
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
![]()

74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மோப்பநாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து பாதுகாப்புத் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வே ADGP வனிதா, ரயில்வே DIG விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
