Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

‘தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று (நவ.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக, கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்கள்!

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி வரும் நவம்பர் 14- ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (நவ.11) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (நவ.12) முதல் ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 15 செ.மீ. மழையும், மண்டபத்தில் 14 செ.மீ. மழையும், பாம்பனில் 8 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ