spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு9 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

9 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

-

- Advertisement -

 

we-r-hiring

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 9 தொகுதிகளில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ஒப்புதலுடன் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அதன்படி, பா.ம.க.வின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடலூர் மக்களவைத் தொகுதியில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேவதாஸ், தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம், சேலம் மக்களவைத் தொகுதியில் அண்ணாதுரை, விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் முரளி சங்கர், திண்டுக்கல் தொகுதியில் கவிஞர் திலகபாமா, ஆரணி மக்களவைத் தொகுதியில் கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை?- விரிவான தகவல்!

காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று பா.ம.க. தலைமை அறிவித்துள்ளது.

MUST READ