Homeசெய்திகள்தமிழ்நாடுஉதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு

-

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் மற்றும் X தளத்தில் பதிவிட்ட நபர் என இருவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின்போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம் , டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாமியாரான உதயநிதி ஸ்டாலினுடைய தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவிப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அமைச்சருக்கு அச்சுறுத்த வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் மிக்க வகையிலும் வீடியோ வெளியிட்ட அச்சுறுத்தல் வீடியோ வெளியிட்ட சிர் ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோ வை X தளத்தில் பதிவிட்ட @ Benarasiyaa என்ற ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சனாதன பேச்சு சர்ச்சை: உத்தரபிரதேசத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு  – AKKINIKKUNCHU

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிர் ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோ வை X தளத்தில் பதிவிட்ட @ Benarasiyaa என்ற ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் 153, 153A (1)(a),504,505(1)(b), 505(2)& 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

MUST READ