spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால்...

சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !

-

- Advertisement -

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் பதவி விலக  வலியுறுத்தி திருவிடைமருதூரை ஒட்டியுள்ள  பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !

தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம் 14ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தில் 28 வது குரு மகா சன்னிதானமாக மகாலிங்க சுவாமிகள் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் உள்ளார். இந்நிலையில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கடந்த அக்டோபர் 10ம் தேதி கர்நாடகாவில் வசித்து வரும் ஹேமாஸ்ரீ என்பவரை, பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக  பதிவுச் சான்றிதழ், இணையதளங்களில் வேகமாக பரவியது.

we-r-hiring

கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதை சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே ,சூரியனார் கோவில் ஆதீனத்திடம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணா, செயல் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றையும் பெற்றனர். திருவாடுதுறை ஆதீனம் சார்பிலும், அறநிலைத்துறைக்கு சூரியனார் கோயில் ஆதீனத்தின் மரபு குறித்து விரிவாக அறிக்கை தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமிகள்  ஆதீனம் மகாலிங்க சுவாமி மரபுகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே ஆதீனத்தை காப்பாற்ற மற்ற ஆதீனங்கள் துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இன்று காலை திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் 13 வயது மகனுடன் உள்ள பெண்ணை ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் பதிவு திருமணம் செய்து  கொண்டாா். இத்தனை ஆண்டுகள் திருவாடுதுறை ஆதீனத்தை ஏமாற்றி சூரியனார்கோவில் மடாதிபதியாக பதவி வகித்து வந்து, ஆதினத்தின் புனிததன்மையை கெடுத்துவிட்டாா். அதனால் சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல்.  இல்லையேல் மடம் மக்கள் வசப்படும்  என்று போஸ்டா் ஒட்டபட்டிருந்தது.  சூரியனார்கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் ஆதீனம் பதவியில் இருந்து விலக  வலியுறுத்தி கண்டன வாசகங்களுடன் ஒட்டபட்ட போஸ்டர்களால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சூரியனார்கோவில் ஆதீன பதவியை கேவலபடுத்தும் போலி சாமியாரே! மடத்தை விட்டு வெளியே செல். – போஸ்டா்களால் பரபரப்பு !

இது தொடா்பாக வழக்கறிஞா் கே.எஸ் .இராதாகிருஷ்ணன்  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது – தமிழகத்தின்  மடங்களில் இருக்கும் ஆதீன கர்த்தாக்களும் ஜீயர்களும் மிக ஒழுக்கமாகத் தங்கள் வாழ்க்கையைப் பேண வேண்டும் என்பதைத்தான் அவர்களின் இறை யருள் என்கிறோம்.

அதற்காகத்தான் அவர்களுக்காக அத்தகைய தலைமைப் பீடங்கள் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவத்தில் போப் ஆண்டவரையும் அப்படித்தான் பார்ப்பார்கள்! பெரும்பாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது ஆகம விதி! இதில் வைஷ்ணவ ஜீயர்கள் ஒருவேளை திருமணம் பண்ணி இருந்தாலும் கூட இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஜீயராக மாறிவிட்டால் பிறகு குடும்பத்திற்கும் செல்ல மாட்டார்கள். அவர்கள் மார்க் கத்தில் இப்படியான பாரம்பரியம் உண்டு.

ஆனால் சைவ ஆதீனங்களில் உள்ள மடாதிபதிகள் திருமணம் செய்யக்கூடாது! ஒருவேளை திருமணம் செய்து கொண்டு விட்டால் அந்த ஆதீனத் தலைமை பீடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும்! அதுதான் முறை! அதை விட்டுவிட்டு ஊருக்கு உபதேசமும் செய்து  கொண்டு ஆசிகளையும் வழங்கிக் கொண்டு திருமணமும் செய்து கொள்வோம் என்று சொல்வது மத அடிப்படை ஆச்சாரங்களுக்கு எதிரானது! அது தூய்மையானது அல்ல!  பக்தி மார்க்கத்திற்கு ஆரோக்கியமானதும் அல்ல !புனிதமும் அல்ல!

எனக்குத் திருவாடுதுறை ஆதீனம், தர்ம புரம் ஆதீனம், மதுரை ஆதீனம் போன்றவர்களுடைய வரலாறு தெரியும்! நீண்ட கால தொடர்புகள் உண்டு.குறிப்பாக முன்னாள் திருவாடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய இருவர்களோடு பல விஷயங்களைக் கலந்து பேசி இருக்கிறேன்! வீர சைவமோ சைவ ஆதீனங்களான  திருவாடுதுறை ஆதீனமோ தருமபுர ஆதீனமோ இல்லை காஞ்சிபுரம் துணை ஆதீனமோ சூரிய நாராயண கோவில் ஆதீனமோ கோவை போரூர் ஆதீனமோ நகரத்தார் ஆதீனமோ இவை யாவும் மேற்சொன்ன ஆகம விதிகளை நடைமுறைகளைக் கடைப்பிடித்து வந்தவவைதான்.

இன்று சைவ ஆதீனங்களைக் கேவலப்படுத்தும் வகையில் நடிகைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி போய் கைலாசா என்னும் இடத்தில் தனி நாடு என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றி தெரியும் நித்தியானந்தா போன்று உருவாக்கப்பட்டதல்ல இந்த ஆதீனங்கள்.

மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் வேண்டும் – மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

இந்துக்களின் இருபெரும் மார்க்கங்களான சைவம் வைஷ்ணவம் இரண்டிலும் தலைமைப் பண்புள்ள ஜீயர்களும் மடாதிபதிகளும் அருள் வழங்கக் கூடிய புனிதர்களாக எதிலும் பற்றற்று உலக தேச சேமங்களுக்காக பிரார்த்தனை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நாம் சொல்ல வருவது!

MUST READ