spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்

பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்

-

- Advertisement -

பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்

உலக நன்மைக்காக அடிக்கு 1008 லிங்கம் இருப்பதாக கருதக்கூடிய கிரிவலப் பாதையில் கால் பாதம் தரையில் படாதவாறு வேட்டியை தரையில் போட்டு கிரிவலம் வந்த ஆன்மீக குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிவலம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கோவிலில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் ஞானிகளும் சித்தர்களும் பக்தர்களோடு இணைந்து கிரிவலம் என்பவர் ஐதீகம். அதேபோல் திருவண்ணாமலையில் அடிக்கு 1008 லிங்கம் இருப்பதாக ஆன்மீக பக்தர்களின் நம்பக்கையாக உள்ளது.

we-r-hiring

கிரிவலம்

இந்நிலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர், அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு தன் குடும்பத்துடன் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவலம் செல்ல தொடங்கினார். முன்னோர்களும் ஆன்மீக குருமார்களும் கூறியது போன்று அடிக்கு 1008 லிங்கம் மற்றும் சித்தர்களும் ஞானிகளும் கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்வதால் அவர்கள் மீது பாதங்கள் சாலையில் படாமல் இருக்க சாலையில் காடா துணி மற்றும் வேஷ்டியை பயன்படுத்தி அதன் மீது நடந்து சென்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

 

MUST READ