spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

-

- Advertisement -
kadalkanni

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு சில வீடுகளில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த ராசாத்திக்கு, அண்மையில் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர், தனது சொந்த ஊர் திரும்புவதற்காக இன்று காலை கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்து கொண்டிருந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ராசாத்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு, பயணி ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இண்டிகோ விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தயார் நிலையில் இருந்த மருத்துவக்  குழுவினர் உடனடியாக விமானத்துக்குள் ஏறி, பெண் பயணியை பரிசோதித்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

அப்போது ராசாத்தி, விமான இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் விமான நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பயணி மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ