
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலைப் பகுதியில் உள்ள பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளப் பொருட்கள் எரிந்து நாசமாகின.

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு
புதுப்பாளையம் பகுதியில் கண்ணன், நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான பனியன் ஆடைத் தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் கிடங்கு இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொழிற்சாலைக்கு வார விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஆலையின் பின்புறம் கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன்களும், இயந்திரங்களும் தீயில் பற்றி எரிந்தன. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகைச் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமா அணைத்தனர்.
இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகளும், இயந்திரங்களும் முற்றிலும் எரிந்துச் சேதமானது. விபத்திற்கான காரணம் குறித்து, நல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


