Homeசெய்திகள்தமிழ்நாடுஉருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

-

 

மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்!

தமிழகத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 13.5 செ.மீ., நாகையில் 11 செ.மீ., கடலூரில் 8.7 செ.மீ., வேதாரண்யத்தில் 11.2 செ.மீ., கோடியக்கரையில் 10.3 செ.மீ., தலைஞாயிறு பகுதியில் 10.1 செ.மீ., சிதம்பரத்தில் 6.2 செ.மீ., கட்டப்பாக்கத்தில் 4.1 செ.மீ., மயிலாடுதுறையில் 8.4 செ.மீ., பொறையாற்றில் 7.7 செ.மீ., சீர்காழி 7.3 செ.மீ., கொள்ளிடம் 6.3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

MUST READ