Homeசெய்திகள்தமிழ்நாடுதுப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

-

- Advertisement -

சென்னை பல்லாவரம் அருகே திரிசூலத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கூலித் தொழிலாளி காலில் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

chennai gun shooting

we-r-hiring

திரிசூலம் பெரியார் நகரில் சங்கர் என்பவர் வீட்டில் கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. அதே சமயம் திரிசூலம் மலைப்பகுதியில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அனுமதி பெற்று துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது தளத்தில் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி இன்சர் அஸ்லம் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த இன்சர் அஸ்லம், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு ஒன்று திசைமாறி 2 கிலோமீட்டர் தூரம் கடந்து கூலி தொழிலாளி காலில் பாய்ந்தது. தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார், சிஐஎஸ்எப் வீரர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ