spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது"- மனோபாலா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

“சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது”- மனோபாலா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

-

- Advertisement -

 

Photo: kamal haasan official twitter page

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று (மே 03) காலமானார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மனோபாலாவின் மகன் ஹரிஸ், வளசரவாக்கம் மின் மயானத்தில் நாளை (மே 04) காலை 10.30 மணிக்கு மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ