Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நடிகை திரிஷா!

நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நடிகை திரிஷா!

-

- Advertisement -

 

த்ரிஷா

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த மன்னிப்பை நடிகை திரிஷா ஏற்றுக் கொண்டுள்ளார். தவறு செய்வது மனித இயல்பு என்றும், மன்னிப்பது தெய்வீக செயல் எனவும் நடிகை திரிஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து ஆபாசமாகப் பேசியது பெரும் சர்ச்சையாகியிருந்தது. அவர் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர் வழக்கும் பதிவுச் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அறிக்கையின் வாயிலாக நடிகை திரிஷாவிடம் மன்னிப்புக் கோரிய மன்சூர் அலிகான், அவரது திருமணத்தின் போது, ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் அருளட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது இளமைக் காலத்தை திரைத்துறையில் இழந்துவிட்டதாகவும், இனி வரும் நாட்களிலாவது ஆக்கப்பூர்வமாக உழைக்கவும், மண்ணின் மீட்சிக்கு சகோதரத்துவத்துடன் உழைக்க இறைவன் சக்தி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மோகன்லால் நடிக்கும் நேரு… புதிய போஸ்டர் வெளியீடு!

இதனை ஏற்றுக் கொண்டு நடிகை திரிஷா, “தவறு செய்வது மனித இயல்பு என்றும், மன்னிப்பது தெய்வீக செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ