spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்!

மாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்!

-

- Advertisement -

 

மாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்!
File Photo

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று (ஜூன் 17) காலை 10.00 மணியளவில் சந்திக்கவுள்ளார்.

we-r-hiring

மல்யுத்த வீரர் அளித்த புகார்- நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல்!

பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணாக்கர்களை நடிகர் விஜய் சந்திக்கிறார். பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகையை வழங்கவுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள RK Convention மையத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது. மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட சுமார் 1,000- க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக, பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாணாக்கர்கள், பெற்றோர்கள், மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பிரியாணியும் வழங்கப்படவுள்ளது.

இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அரசியல் களத்தில் கால்பதிக்க உள்ள நடிகர் விஜய் தனது நலத்திட்டங்களைத் தொகுதியை குறிவைத்து வழங்கவுள்ளார். தொகுதிகளைக் குறி வைத்து நிகழ்ச்சி நடத்தும் விஜய் அரசியல் களத்திற்கு ஆயத்தமாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ