Homeசெய்திகள்தமிழ்நாடுசீமானை காப்பாற்றியது அதிமுக அரசு- நடிகை விஜயலட்சுமி

சீமானை காப்பாற்றியது அதிமுக அரசு- நடிகை விஜயலட்சுமி

-

சீமானை காப்பாற்றியது அதிமுக அரசு- நடிகை விஜயலட்சுமி

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமானை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான், அவரால் அவமானப்பட்டு இங்குவந்து நிற்கிறேன். என்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

நாம் தமிழர் கட்சியை நடத்துவதால் தனது தம்பிகள் தன்னை பார்த்துக் கொள்வதாக சீமான் கூறுகிறார். நிபந்தனை ஜாமினில் மதுரையில் தங்கியிருந்தபோது தன்னை சீமான் அங்கு வரவழைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து விஜயலட்சுமியுடன் மாலை மாற்றிக் கொண்டார் சீமான். நான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

MUST READ