Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வருக்கு பிரச்னை - எடப்பாடி பழனிசாமி

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வருக்கு பிரச்னை – எடப்பாடி பழனிசாமி

-

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வருக்கு பிரச்னை – எடப்பாடி பழனிசாமி

மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Search Around Web Logo

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “செந்தில் பாலாஜி ஏதோ உத்தமர் போல, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளது. அவரது கைதுக்கு புதிய வழக்கு காரணம் இல்லை, 4 ஆண்டுக்கு முந்தைய வழக்கே காரணம். ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால், தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை ஓடோடிப்போய் பார்த்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி கைதால் முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளனர். அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை தங்கள் கடமையை செய்துள்ளது. உரிமம் இல்லாத பார்கள் மூலம் செந்தில் பாலாஜி பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ளார்.

Image
டெண்டர் விடாமல் 2000 மதுபான பார்கள் நடக்கின்றன. உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ளார்கள். ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். மனித உரிமை குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக நேற்று கூறிவிட்டு, இன்றைக்கு தப்பிப்பதற்காக செந்தில் பாலாஜி நாடகம் நடத்துகிறார். தன் மீது தவறு இல்லை எனில், அவர் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

MUST READ