spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. கொடி இல்லாத காரில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. கொடி இல்லாத காரில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம்!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. கொடி இல்லாத காரில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம்!
File Photo

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொடி பொருத்தப்படாத காரில் பயணம் செய்தார்.

we-r-hiring

தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலை நிறுத்தம்!

அ.தி.மு.க.வின் பெயர், கட்சியின் கொடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த சூழலில், சிங்கப்பூரில் இருந்து திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அங்கு அ.தி.மு.க. கொடி இல்லாமல் நின்றுக் கொண்டிருந்த தனது காரில் ஏறி ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இதனிடையே, அ.தி.மு.க. கொடி, பெயர், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள மனு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

MUST READ