spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

 

we-r-hiring

தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று (நவ.09), நாளை (நவ.10), நாளை மறுநாள் (நவ.11) கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள், தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி, ஆரணி, ஆற்காடு, வேலூர், செய்யாறு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!

இதைத் தவிர, அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, செங்கோட்டை, ராமநாதபுரம், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

MUST READ