spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

கனமழை..!

we-r-hiring

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லர்

கனமழை காரணமாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.09) ஒருநாள் விடுமுறை என்று அறிவித்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.09) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கோடி அறிவித்துள்ளார்.

ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

தொடர் கனமழை காரணமாக, தேனி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ