Homeசெய்திகள்தமிழ்நாடுயாருக்காகவும் அதிமுக காத்திருக்காது! பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி

யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது! பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன.

we-r-hiring

அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து இடைத்தேர்தலில் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் பிரிவும் இல்லை, கலகமும் இல்லை. ஈபிஎஸ் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கிறோம். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என்பதை அண்ணாமலை சூச்கமாக கூறியுள்ளார். அண்ணாமலை அதிமுக என குறிப்பிட்டது எங்களைதான். பாஹக தேசிய கட்சி என்பதால் தனது நிலைபாட்டை கூற தாமதமாகிறது.

யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓபிஎஸ், திமுகவை எதிர்க்க வேண்டுமென்ற கட்சியின் கொள்கையை மீறியவர், தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற தீய நோக்கம் தினகரனுக்கு உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர்” எனக் கூறினார்.

MUST READ