Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக- பாஜக கூட்டணி முறிகிறதா? ஜெயக்குமார் பதில்

அதிமுக- பாஜக கூட்டணி முறிகிறதா? ஜெயக்குமார் பதில்

-

- Advertisement -

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் அளித்தார்.

jayakumar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பணிமனையில் பாஜக தலைவர் படம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், கூட்டணி இறுதியானவுடன் அதில் இடம்பெறும் அனைத்து கட்சி தலைவர்களின் படமும் பேனரில் இடம்பெறும் என்றார். அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு தட்டச்சில் ஏற்பட்ட பிழையே காரணம் என்று கூறினார். ஈரோடு இடைத்தேர்தல் பணிமனையில் கூட்டணியின் பெயர், 3 முறை பெயர் மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

we-r-hiring

பாஜக வேட்பாளர் நிறுத்துவது பற்றியோ பாஜக போட்டியிடுவது பற்றியோ கவலை பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 பூத்கள் உள்ளன. போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடக்கிறது. வாக்குகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

Home

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை எனக் கூறிய ஜெயக்குமார், இடைத்தேர்தலில் பாஜகவிடம் ஆதரவு கோரியுள்ளோம். அவர்களது முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

MUST READ