Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? இல்லையா?

-

- Advertisement -
kadalkanni

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 06ம் தேதி சிகிச்சை உயிரிழந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

அதிமுக அலுவலகம்

ஆனால் அதிமுக மட்டும் இதுவரை இடைத்தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

MUST READ