அண்ணாமலை எங்களுக்கு Just like தான் – செல்லூர் ராஜூ
பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா தான் எங்களுக்கு முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாடு அழைப்பிற்காக ரிக்க்ஷா ஓட்டுபவர்களுக்கு வேஷ்டி, சட்டை வழங்கிய செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை மாநாட்டிற்கு திரளாக வரும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா தான் எங்களுக்கு முக்கியம். அண்ணாமலை எங்களுக்கு Just like தான். எடப்பாடி பழனிசாமியின் அருமை பிரதமருக்கு தெரிகிறது. அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை. தக்காளியை ரேசன் கடையில் விற்பதற்கு பதிலாக தள்ளுவண்டியில் தெரு தெருவாக விற்கலாம்.

கட்சியைவிட்டு சென்ற ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மதுரை மாநாடு கின்னஸ் சாதனை படைக்கும். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி. பிரதமருக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.