spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள்- வைத்திலிங்கம் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி ஒரு முட்டாள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்த்துள்ளார்.

Image
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நடந்தது. அங்கு நடந்த கொள்ளையை தொடர்ந்து அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

Image

we-r-hiring

அதனொரு பகுதியாக தஞ்சை ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக காரணமானவர்கள். ஜெயக்குமார் மண் குதிரை என்று ஓ.பி.எஸ். சையும், டி.டி.வி தினகரனையும் கூறி இருக்கிறார் . அப்படிப்பட்ட ஒ.பி.எஸ். சும், டி.டி.வி. தினகரனும் தான் எதற்கும் லாயக்கற்ற எடப்பாடியை முதல்வராக்கிவர்கள். கோமாளிகளின் கூடாரமாக எடப்பாடி அணி உள்ளது. கம்பராமாயணத்தை இயக்கியவர் சேக்கிழார் என்று பேசிய முட்டாள் தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியிடம் பணமும், இரட்டை இலையும் இல்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் 2 ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியாது. பணம் இல்லை என்றால் எடப்பாடி கூட்டம் பர்மா அகதிகள் போல் இருப்பார்கள். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

MUST READ