Homeசெய்திகள்தமிழ்நாடுகைக்கூடுமா கூட்டணி- தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது அ.தி.மு.க.!

கைக்கூடுமா கூட்டணி- தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது அ.தி.மு.க.!

-

 

தே.மு.தி.க.வுடன் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியது அ.தி.மு.க.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின், தங்கமணி, அன்பழகன் உள்ளிட்டோர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோருடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

அப்போது தே.மு.தி.க. தரப்பில் 4 மக்களவைத் தொகுதிகளையும், 1 மாநிலங்களவை பதவியும் வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அழுத்தமாகத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், விருதுநகர், கடலூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

முன்னாள் மிஸ் இந்தியா மரணம்… புற்றுநோயால் பாதிப்பு…

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்; இரு தரப்பிலும் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ