

அ.தி.மு.க.வின் மகளிர் அணியின் துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறை அதிகாரம் – ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி கருத்து!
நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், பா.ஜ.க.வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி, சில மாதங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம், அவர் முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
இந்த சூழலில், திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராமை, அ.தி.மு.க.வின் மகளிர் அணியின் துணைச் செயலாளராக நியமித்து அறிவித்துள்ளார் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
மீண்டும் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி- மக்களவை தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இதோ..!!
மேலும், அவருக்கு முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு அ.தி.மு.க.வினரை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
