டிஜிடல் சர்வே முறையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும்; இதில் தவறு ஏதும் இல்லை- வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.
கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ம் தேதி அரசின் திட்டங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நடத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் சேர்ந்த குழுக்களுக்கு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்பியம்பேட்டை பகுதியில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டனர்.
பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது அவர் கூறுகையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் சேர்ந்த குழுக்களுக்கு வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு விளையாட்டு துறைகளில் அதிக ஆர்வம் ஏற்பட்டு சாதனை படைக்க ஏதுவாக அமையும். இதனை தொடர்ந்து அரசின் திட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய மழை அதிகம் பெய்யவில்லை. ஆனால் வருங்காலங்களில் மழை பெய்தாலும் வேளாண்மை துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் பயிர் காப்பீட்டு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை இருந்து வந்தது. தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர் காப்பீட்டு செய்வதற்கு கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விடுபட்ட விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியானதல்ல – தமிழிசை சௌந்தரராஜன்
மேலும் டிஜிட்டல் சர்வே முறையில் 21,000 வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இது அவர்களுக்கு வேளாண் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்றும் இந்த சர்வே எடுக்கப்படாவிட்டால் மத்திய அரசின் நிதி நமக்கு நிறுத்தப்படக்கூடிய ஒரு சூழல் இருந்ததாகவும் தெரிவித்தார். முன்னாள் சென்றாலும் உதைக்கின்றார்கள் பின்னால் சென்றாலும் உதைக்கின்றார்கள் இதுவே எதிர்க்கட்சிகளின் நிலைமை ஆனால் அனைத்து செயல் திட்டங்களும் சரியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.