- Advertisement -
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளது.

பொதுக்குழு தீர்மானத்தின்படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பழனிசாமி கோரிக்கையை நிராகரித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் நேரில் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முகாமிட்டுள்ளனர். பழனிசாமியின் இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
