Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக எங்களை அவமதித்துவிட்டது: தனித்துப் போட்டி என டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

அதிமுக எங்களை அவமதித்துவிட்டது: தனித்துப் போட்டி என டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

-

- Advertisement -

​புதிய தமிழகம் கட்சியை அதிமுக முற்றிலும் புறக்கணித்துவிட்டது என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளாா். அதிமுக எங்களை அவமதித்துவிட்டது: தனித்துப் போட்டி என டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, அதிமுக தலைமை தங்கள் கட்சியைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறி, தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

​திடீரென நின்ற பேச்சுவார்த்தை
கடந்த சில வாரங்களாக அதிமுக மற்றும் புதிய தமிழகம் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டதாக கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
​”புதிய தமிழகம் கட்சியை அதிமுக முற்றிலும் புறக்கணித்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைகள் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன. இது எங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தையுமே அவமதிக்கும் செயலாகும்.”

தனித்துப் போட்டி முடிவு
​கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறி மற்றும் அதிமுகவின் அணுகுமுறையால் அதிருப்தியடைந்த புதிய தமிழகம் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஏற்கனவே பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ள நிலையில், கிருஷ்ணசாமியின் இந்த வெளியேற்றம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஆட்சிப் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை அதிமுக ஏற்காததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

MUST READ