- Advertisement -
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்தக் கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநடப்பில் தவெக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய 9 கட்சிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
