Homeசெய்திகள்தமிழ்நாடு"இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?"- எடப்பாடி பழனிசாமி பதில்!

“இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?”- எடப்பாடி பழனிசாமி பதில்!

-

 

"இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?"- எடப்பாடி பழனிசாமி பதில்!

தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடிப்பின் சிற்பி சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்!

சேலத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க.வை அழித்து விடுவதாக அண்ணாமலை கூறுவது வெற்று வார்த்தை; டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது கூட தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதால் எந்த பலனும் இல்லை.

தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!

எனவே, தமிழக மக்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும் வாக்களிக்கும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ