Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூபாய் 173 கோடி ஒதுக்கீடு

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூபாய் 173 கோடி ஒதுக்கீடு

-

தூத்துக்குடி, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக 173 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஒன்றிய மாநில அரசு பங்களிப்போடு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதிக்காக தூத்துக்குடி மற்றும் வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த நிர்வாக மற்றும் அலுவலக செலவினங்களுக்காக கடந்த டிசம்பர் மாதம் 87 கோடியை 75 லட்சம் ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக 173 கோடியை 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசு 943 கோடியே 25 லட்சம் ரூபாயும் அதற்கினையாக தமிழ்நாடு அரசு 912 கோடி ரூபாய் என மொத்தமாக 1855 கோடியே 27 லட்சம் ரூபாயில் தூத்துக்குடி மற்றும் வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

MUST READ