Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை மதுரை வருகிறார் அமித்ஷா

நாளை மதுரை வருகிறார் அமித்ஷா

-

நாளை மதுரை வருகிறார் அமித்ஷா

நாளை மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகிறார்.

Image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாளை மதியம் 1 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை தர உள்ளார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு ராமேஸ்வரம் செல்ல உள்ளார். இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். மாலை 5.20 முதல் 5.40 வரை தங்கும் விடுதியில் ஓய்வெடுக்க உள்ள அமித்ஷா, மாலை 5.45 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ