Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

-

- Advertisement -

பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும் பதட்டம் அடையாமல் தேர்வுகளை எழுதுங்கள். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமபுற மாணவர்கள் உரிய நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் வழி தடங்களை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே.5 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 19 ஆம் தேதியும் வெளியிடப்படும். செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10 வரை நடைபெற இருந்த நிலையில் மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் தரமான காய்கறிகள் பெற, அரசுப் பள்ளிகளிலேயே காய்கறித் தோட்டங்கள் அமைக்கும் பசுமைப் பள்ளித் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவர் சேர்ந்துள்ளனர்” எனக் கூறினார்.

 

 

 

MUST READ