
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சுமார் 21.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 7 அடி உயர சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!
இந்த விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.