Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா நினைவு தினம்- திமுக சார்பில் அமைதி பேரணி

அண்ணா நினைவு தினம்- திமுக சார்பில் அமைதி பேரணி

-

- Advertisement -

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

we-r-hiring

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவரது ஒவ்வொரு நினைவுநாள் அன்றும் திமுகவினர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, 54வது நாளாவது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பேரணியாக வந்து மரியாதை செலுத்தினர். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கிய அமைதி பேரணி, வாலாஜா சாலை வழியாக மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவுபெற்றது.

திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர்.பாலு அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, மா,சுபிரமணியன் , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்திய பின், நிர்வாகிகளும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

Home

அமைதி பேரணிக்காக ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு அளித்தனர், மேலும் பேரணி காரணமாக வாலாஜா சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

MUST READ